அம்மன் நகை திருடி அடகு வைத்த அர்ச்சகர்..!
திருவேற்காடு கோயிலில் நகையை கொள்ளையடித்த அர்ச்சகர் அரசு பள்ளியில் பயிற்சி பெற்றவரல்ல என விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அம்மன் நகையை அர்ச்சகர் ஒருவர் திருடி அடகு வைத்திருக்கிறார்.
இவர் அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் அல்ல என தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு கருமாரியம்மன் கோயில் நகையை திருடிய அர்ச்சகர் சண்முகம் அவரது தந்தையிடம் பயிற்சி பெற்றவர் என தெரிய வந்தது.
அரசின் பயிற்சி பள்ளியில் அர்ச்சகர் சண்முகம் பயிற்சி பெறவில்லை என்று தமிழ்நாடு உண்மை கண்டறியும் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. 57 கிராம் தங்க நகை மீட்கப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





