புறாவை பிடிக்க சென்று கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்..!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புறா பிடிக்க சென்ற பொழுது கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகிறது. 8ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள விவசாய நிலப்பகுதியில் புறா பிடிக்க சென்றுள்ளார்.
அப்பொழுது அங்குள்ள 30 அடி ஆழ கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறு விழுந்துள்ளான். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுவனை பத்திரமாக மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





