--- --:--:-- --

மோசடி வழக்கில் வி3 ஆன்லைன் டிவி உரிமையாளர் குருஜி கைது..!

10

வி3 ஆன்லைன் டிவி உரிமையாளர் குருஜி என்கிற விஜயராகவன் போலி சான்றிதழ்கள் கொடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறை மோசடி வழக்கு பதிவு செய்தது.

 

அந்த நிறுவனத்தின் பொருட்கள் சித்த மருத்துவ மாத்திரைகளை குருஜி என்கிற விஜயராகவன் வழங்கி வந்த நிலையில் அவரை அழைத்து காவல்துறை விசாரணை நடத்தியது. அப்பொழுது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயற்கை மருத்துவத்தில் நுழைவு பட்டம் வழங்கியதாக சான்றிதழ்கள் வழங்கியுள்ளார்.

 

அது போலியானவை என தெரிய வந்ததையடுத்து மதுரையில் வைத்து விஜயராகவனை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது மோசடி உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக v3 ஆன்லைன் டிவி நடத்தி வந்த விஜயராகவன் திடீரென அந்த நிறுவனத்தை மூடினார்.

 

அந்த நிறுவனத்தில் பணியாற்றிய சக்தியானந்தன் அதன் பிறகு மை வீ3 ஆட்ஸ் நிறுவனத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon