கோயில் திருவிழாவில் திடீரென மிரண்ட யானை.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்..!

கேரள மாநிலம் பாலக்காடு சாலச்சேரியில் உள்ள கோயிலில் நடைபெற்ற விழாவில் எழுந்தருளும் நிகழ்ச்சியின் பொழுது யானை திடீரென மிரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாகன்கள் யானையை அடக்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 

விழா திடலில் இருந்து யானை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் யானை மிரண்ட பொழுது பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.