--- --:--:-- --

உயிருடன் இருக்கும் கணவருக்கு இறப்பு சான்றிதழ்.. விதவை உதவி தொகையால் மனைவி பகீர் செயல்..!

10

உயிருடன் இருக்கும் போதே விதவை உதவித் தொகை பெற்று வரும் மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி.யிடம் கணவர் புகார் அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கபூர் மேலவீடு பகுதியில் சேர்ந்தவர் திருமால்.

 

இவரது முதல் மனைவி உதயம் உயிரிழந்த நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு முத்துலட்சுமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த 2022ம் ஆண்டு வரை கணவருடன் வாழ்ந்து வந்த முத்துலட்சுமி அவரை விட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து முத்துலட்சுமி தனது கணவர் இறந்தது போல் இறப்பு சான்றிதழ் வாங்கி விதவை உதவி தொகை பெற்று வருவது திருமாவுக்கு தெரிய வரவே அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இறப்பு சான்றிதழை நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகைப்பட ஆதாரங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon