--- --:--:-- --

திடீரென தடம் புரண்ட ரயில்..!

2

கும்பகோணத்தில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு ரயில் எஞ்சின் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து 2000 டன் நெல் முட்டையை ஏற்றுக்கொண்டு ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு கொண்டு செல்வதற்காக திருச்சியில் இருந்து 42 வேகங்களுடன் சரக்கு ரயில் வந்துள்ளது.

 

இரட்டை எஞ்சின்கள் பொருத்தப்பட்ட இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு எஞ்சின் பொருத்தப்பட்டு காலியாக இருந்த நிலையில் இரவு கும்பகோணம் வந்த சரக்கு ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது.

 

காலையில் நெல் மூட்டைகளை ரயில்களில் ஏற்றுவதற்காக லாரிகள் கொண்டுவரப்பட்ட நெல்மூட்டைகள் அந்தந்த ஸ்டேஷன்களில் இருந்து நிறுத்தப்பட்டிருந்தன. காலையில் ரயில் பெட்டிகளோடு பொருத்தப்பட்ட இஞ்சினுடன் அதிக திறன் கொண்ட இன்ஜினை இணைக்கும் பணி நடைபெற்றது.

 

அப்பொழுது என்ஜின் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி ஓடி ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த எஞ்சின் மீது மோதுகின்றது. அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon