--- --:--:-- --

பொங்கல் பரிசு தொகை யார் யாருக்கெல்லாம் வழங்கப்படவில்லை?

11

பொங்கல் பரிசுத்தொகுப்பு யார் யாருக்கெல்லாம் வழங்கப்படவில்லை என்ற விவரங்களை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ராமநாதபுரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் பொங்கல் பண்டிகை பரிசு தொகை பெற டோக்கன் வழங்கிய தேதியில் ரேஷன் கடைக்கு சென்றபோது கடை மூடப்பட்டிருந்ததாகவும் பரிசுத்தொகையை பெற முடியவில்லை எனவும் பரிசுத்தொகையை வங்கி கணக்கில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி வரதட்சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது யார் யாருக்கெல்லாம் பரிசு தொகை கிடைக்கவில்லை, விவரங்களை சமர்ப்பிக்கும்படி மனுதாரர்கள் தரப்பில் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon