--- --:--:-- --

ஏடிஎம் எந்திரத்தில் டேப் ஒட்டி திருட முயற்சி..!

10

சென்னை கொளத்தூர் 200 அடி சாலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் எந்திரத்தை திறக்க முயன்ற பொழுது போலீசார் வந்ததால் உத்தர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பேரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.

 

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் டேப் போட்டுவிட்டால் பொதுமக்கள் எடுக்கும் பொழுது வெளியே வராமல் இருக்கும் எனவும், பின்னர் இயந்திரத்தின் பெட்டியை திறந்து பணத்தை எடுத்து விட திட்டமிட்டு இருந்ததாகவும் டேப் ஒட்ட முற்பட்ட பொழுது வங்கி அலாரம் அளித்ததால் திருட்டு தடுக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon