சட்டப்பேரவையில் அலங்கரித்து வைத்த ஜெயலலிதா படத்திற்கு புதுச்சேரி முதல்வர் மரியாதை..!
மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல் உட்கலம் பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மேடைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





