--- --:--:-- --

மாநில மகளிர் கொள்கையை வெளியிட்ட முதலமைச்சர்..!

5

மிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில வரவேற்பு கொள்கை 2024 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

 

சமூகநீதி சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவற்றின் அடிப்படையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையானது பத்து ஆண்டுகள் அல்லது அடுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்க உள்ளது.

 

மேலும் இந்த கொள்கையினை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் வேலை வாய்ப்புகளில் மகளிர் பங்களிப்பை அதிகரித்தல் மகளிர் அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

 

தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்ட அளவிலான பெண்கள் உரிமை குழு 6 மாதங்களுக்கு ஒரு முறை கொள்கை குறித்து ஆய்வு செய்து இடைக்கால திருத்தங்களை பரிந்துரைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கொள்கையின் செயலாகத்தை கண்காணித்து எதிர்கொள்ளப்படும் சவால்களை சரி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon