அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு அலெர்ட்
ஆந்திரப்பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ள நிலையில், எல்லையில் உள்ள திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. இதற்கு பறவைக்காய்ச்சல் பரவலே காரணம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆந்திர எல்லையோரத்தில் உள்ள திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களின் சுகாதாரத் துறை துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், இந்த 5 மாவட்டங்களிலும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





