பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு ..குண்டர் சட்டத்தில் கைது..!
அரியலூர் அருகே பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே ஜேசிபி ஓட்டுனர் ஆன ஞானசேகரன் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில் இரண்டாவது முறை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவன் தற்பொழுது மூன்றாவது முறையாக பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான்.





