டேக்வாண்டோ மாணவனை தாக்கிய பயிற்சியாளர்.. பெற்றோர் கண்ணீர் மல்கப் புகார்..
தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவனை டேக்வாண்டோ பயிற்சியாளர் ரயிலில் இரண்டு நாட்கள் உணவு கொடுக்காமல் அடித்து துன்புறுத்தியதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தென்காசி அளவிலான போட்டியில் தங்கம் வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் ரிஷிகேஷ் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற வெண்கலம் வென்றார்.
இதனை தொடர்ந்து திருவனந்தபுரத்திற்கு ரயில் பயிற்சியாளர்களோடு திரும்பி இருக்கிறார். அப்பொழுது நண்பர் ஒருவருடன் செல்போனில் பேசிய பொழுது பயிற்சியாளர் ராமலிங்கம் அவதூறு பேசியதாக கூறப்படுகிறது.
ரிஷிகேஷ் தொடர்பு கொள்ள முடியாமல் அவரது பெற்றோர் காவல் துறைக்கு தகவல் கொடுக்க சேலத்தில் ரிஷிகேஷிடம் விசாரணை நடத்தி பத்திரமாக திருவனந்தபுரம் அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.





