--- --:--:-- --

3 மாத குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய கொடூரத் தாய்..!

10

சென்னை மதுரவாயலில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட மூன்று மாத ஆண் குழந்தையை போலீசார் மோப்ப நாய் உதவியோடு தேடி வருகின்றனர். சென்னை அடுத்த மதுரவாயில் தனலட்சுமி நகர் பகுதியில் சேர்ந்தவர் அஞ்சலி.

 

இவர் தனது மூன்று மாத ஆண் குழந்தையை கடத்தி சென்று விட்டதாக போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

 

அப்பொழுது பெற்ற தாயை குழந்தையை குப்பை தொட்டியில் வீசிவிட்டு நாடகம் ஆடியது தெரிய வந்தது. உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் குழந்தையை சுற்றி குப்பை தொட்டியில் வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon