--- --:--:-- --

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர் மீது ஆசிரியர் தாக்குதல்..!

9

தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர் மீது ஆசிரியர் தாக்கியுள்ளார். திருச்சி பள்ளி ஆசிரியர் முருகதாஸ் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள காஜா மியான் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாணவரின் மூளை பாதிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் இழப்பீடு வழங்கவும் தந்தை மனு அளித்துள்ளார்.

 

பள்ளி மாணவனின் மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்ற மருத்துவர்கள் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த திருச்சி காவல்துறையை எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இழப்பீடு குறித்து பள்ளி நிர்வாகம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon