--- --:--:-- --

இருவீட்டு சுவரின் இடுக்கில் சிக்கி பறிபோன உயிர்..!

10

துபோதையில் மொட்டை மாடியில் இருந்து அவரை விழுந்த நபர் இரு வீட்டு சுவர்களுக்கு இடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சேரி ஏனாம் பகுதியில் வசித்து வந்த சிவசுப்பிரமணியன் என்பவர் தாய் தந்தையை இழந்து தனியே வசித்து வந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மது அருந்திவிட்டு தனது வீட்டு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.

 

அப்பொழுது கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்த சுப்பிரமணியம் இருவீட்டு சுவர்களுக்கு இடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது அக்கம் பக்கத்தினரை அதிர்ச்சி அடைய செய்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுப்பிரமணியத்தின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள எலக்ட்ரிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை பகுதியில் உள்ள கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்தது. தீ விபத்து காரணமாக வியாபாரிகள் அச்சமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வீரர்கள் விரைந்து தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

Right Menu Icon