--- --:--:-- --

கோவையில் விஷவாயு தாக்கி தொழிலாளி ஒருவர் பலி..!

6

கோவையில் கழிவறை தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்தார். கோவையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மோகனசுந்தரம் என்பவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 2 பணியாளர்களுடன் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

 

அப்பொழுது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி மூவரும் மயக்கம் அடைந்ததை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சுந்தரம் உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றியதால் உயிரிழப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon