தனது குழந்தைகளை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொடுமை செய்த தாய்..!
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மூன்று சிறுவர்கள் மாயமான விவகாரத்தில் தகாத உறவு கொண்ட காதலனுடன் சேர்ந்து தாய் சித்திரவதை செய்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாக மூன்று சிறுவர்களும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பிரியா என்பவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் வெளிநாட்டில் தங்கி பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கணவரை பிரிந்த பிரியா, ஜெகன் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்த நிலையில் திடீரென தனது மூன்று மகன்களும் மாயமாகியதாக கூறி போலீசில் புகார் அளித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.
விசாரணையில் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டில் சிறுவர்கள் மூவரும் இருப்பது தெரியவர மூவரையும் போலீசார் மீட்டு நீதிமன்றத்தில் தகாத உறவு வந்த காதலுடன் சேர்ந்து தங்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாகவும் இதனாலேயே வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் கூறிய சிறுவர்கள் தற்போது சகோதரியை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து சிறுவர்களின் தாய் பிரியா மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஜெகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவிட்ட நிலையில் தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





