ஆ.ராசா உருவப்படத்தை காலணியால் அடித்து அதிமுகவினர் போராட்டம்..!
கோயில்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உருவப்படத்தை காலணியால் அடித்த புகாரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுடைய அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தலைமையில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்பொழுது மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து ஆ.ராசா பேசியது கண்டிக்கும் வகையில் அவரது உருவப்படத்தை அதிமுகவினர் காலணியால் அடித்தனர்.
இது தொடர்பாக திமுக சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கடம்பூர் ராஜு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெருமாள் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





