--- --:--:-- --

பள்ளிக்கு வராத 4 மாணவிகள்.. மாயமானதால் பரபரப்பு..!

9

சேலம் கோட்டை அரசு மகளிர் பள்ளியில் பயின்ற 4 மாணவிகள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் வழக்கம் போல் வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்ற நிலையில் பள்ளிக்கு வராததால் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில் மாணவிகள் ஏற்காடு அடிவாரப் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

அதனை தொடர்ந்து மாணவிகளை போலீசார் மீட்டனர். பள்ளி வகுப்பை புறக்கணித்து மாணவிகள் சுற்றி திரிந்தது விசாரணையில் தெரியவந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon