--- --:--:-- --

கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் கேபிஒய் பாலா..!

2

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கர்ப்பிணி பெண்களை டோலி கட்டி வருவதாக செய்தி அறிந்த நடிகர் கேபிஒய் பாலா கிராம மக்களுக்கு அவசர ஊர்தி ஒன்றை வழங்கினார்.

 

அக்டோபர் மாதம் 3ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு டோலிக்கட்டி தூக்கி சென்ற ராஜேஸ்வரி என்பவரிடம் அவசர ஊர்தியை நடிகர் பாலா ஒப்படைத்தார்.

 

இதற்காக பாலாவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். பாலா இதற்கு முன்னதாகவே ஏழை மக்களுக்காக பல்வேறு கிராமங்களுக்கு அவசர ஊர்திகளை வழங்கியது நினைவு கூறத்தக்கது.

 

Right Menu Icon