--- --:--:-- --

உணவு பரிமாறியதில் ஏற்பட்ட தகராறு.. சிறையில் அடித்துக் கொண்ட கைதிகள்..!

10

சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு ஒருவருக்கு பல் உடைந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் சிறைக்குள் மதிய உணவு இடைவெளியின் பொழுது இரு கைதிகளைக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

 

திருட்டு வழக்கில் கைதான ரமேஷ் பஞ்சரக்சன் என்பவர் தனக்கு உணவு பரிமாறிய போக்சோ வழக்கில் கைதான மூர்த்தி என்பவரிடம் உணவின் அளவை குறைத்து பரிமாறியதாக தகராறு செய்து அவரை தாக்கியிருக்கிறார்.

 

இந்த நிலையில் மூர்த்தியின் பற்கள் உடைக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இது குறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon