இரண்டாக உடைந்த தண்டவாளம்.. திண்டுக்கல்லில் பெரும் விபத்து தவிர்ப்பு..!
ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பாலக்காடு திருச்செந்தூர் விரைவு ரயில் திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் இடத்தில் சென்ற பொழுது தண்டவாளத்தில் எழுந்த சட்டத்தை கேட்டு ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்தினார்.
ஆய்வு செய்தபோது தண்டவாளம் உடைந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ரயில்வே பணியாளர்கள் தற்காலிக தண்டவாளத்தை அமைத்தனர்.






