--- --:--:-- --

கருப்பு பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்..!

8

சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் உள்ள விவசாயிகள் கருப்பு பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இதனை ஒட்டி அதற்கான நிலங்கள் மற்றும் வீடுகளை அதிகாரிகள் இடித்து வருகின்றனர். சிப்காட் தொழிற்பேட்டையால் சுற்றுச்சூழல் பாதிப்படையும் என்று கோரி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon