வரும் 19, 20 இல் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் வறண்ட வானிலையை நிலவும் என்று நீலகிரி மாவட்டத்தில் உறை பணி நிலவும் எனவும் மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியில் மழை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 22ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
19, 20 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். குறிப்பாக இன்றும், நாளையும் இரவு வேளையில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் உறை பனி நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





