--- --:--:-- --

அடல் சேது பாலம் பிக்னிக் ஸ்பாட் இல்லை..!

7

அடல் சேது பாலம் பிக்னிக் ஸ்பாட் இல்லை என்று மும்பை போக்குவரத்து காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. அண்மையில் மும்பை நவிமும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம் திறக்கப்பட்டது.

 

மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த பாலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாலத்தில் செல்லும் மக்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம், வீடியோ மற்றும் செல்பி எடுத்தபடி உள்ளனர்.

 

இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அடல் சேது பாலம் பிக்னிக் ஸ்பாட் அல்ல என்று மும்பை போக்குவரத்து காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. பாலத்தில் வாகனங்களை நிறுத்தினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon