அதிவேகத்தில் ஓவர் டேக் செய்த கார்.. திடீரென சுழன்று கொண்டே விபத்து..!
தெலுங்கானாவில் அரசு பேருந்தை ஓவர் டேக் செய்ய முயன்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள சாலையில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது.
இளைஞர் தனது நபர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அதிவேகத்தில் அரசு பேருந்து ஒன்றை ஓவர் டேக் செய்திருக்கிறார். அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்தது.
காரில் பயணித்த நால்வரில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.





