தமிழகத்தில் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்..!
பொங்கல் பண்டிகையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப்பொங்கல் தைப்பொங்கல் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது இடுப்பாட்டி பொங்கல் அல்லது கன்று பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.
மக்களின் வாழ்வில் ஒன்றிய மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் மரியாதை செலுத்துவதற்காகவும் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது என்றும், மாடுகளை சுத்தம் செய்யும் விவசாயிகள் மாடுகளின் கொம்புகளில் வர்ணம் பூசி கூம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டி அழகுபடுத்துவார்கள்.
மேலும் தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி மாடுகளுக்கு பொங்கல், பழம் என அனைத்தும் உண்ண கொடுத்து தங்களது குடும்பத்தில் ஒருவராக பாவித்து மகிழ்வார்கள்.





