அரசு பள்ளிக்கு நிலத்தை கொடை அளித்த ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது..!
அரசு பள்ளிகளுக்கு நிலத்தை கொடை அளித்து ஆயி அம்மாளுக்கு குடியரசு தினத்தில் சிறப்பு விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கல்விதான் உண்மையான அழிவற்ற செல்வம் ஒரு தலைமுறையில் வரும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது ஒரு ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக கொடையாக அளித்த ஆயி அம்மாளுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ஆயம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கல்வியும் கற்பித்தலையும் உயர்ந்த அளவில் மதிக்கும் தமிழ் சங்கத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தை போற்றி வருகிற குடியரசு தின விழாவில் அரசு சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





