பிரபல யூடியூபருக்கு அபராதம்.. ஐகோர்ட் உத்தரவு..!
அவதூறு கருத்து வெளியிட்டதற்காக யூடியூபர் ஜோமைக்கேல் பிரவீனுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் திருநங்கை சமூகத்தினருக்கு நீதி கிடைத்துள்ளதாக திருநங்கை அக்ஷரா தெரிவித்தார்.
சமூக வலைதளம் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் திருநங்கைகள் துஷ்பிரயோகம் வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அவர் கூறினார். தற்பொழுது உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் மனித உரிமை நிறுத்தப்பட்டதாக அக்ஷரா தெரிவித்தார்.






