--- --:--:-- --

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்த திட்டம்..!

2

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இந்தியா கூட்டணி மாணவர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளனர்.

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு கூட்டம் நடத்துவதற்காக சென்னையில் இருந்து விமானம் சேலம் சென்ற பிறகு தரை மார்க்கமாக பல்கலைக்கழகம் செல்ல உள்ளார். பல்கலை முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஆளுநர் வருகைக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இதனை வழிப்படுத்தும் விதமாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் மாணவர் அணி சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சி.வி.எம்.பி எழிலரசன் அறிவித்துள்ளனர். இதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதமும் வழங்கியுள்ளனர்.

 

Right Menu Icon