--- --:--:-- --

3 வயது சிறுமியை கடித்த சிங்கவால் குரங்கு..!

10

கேரள மாநிலம் இடுக்கியில் வனத்திலிருந்து வெளியேறிய மூன்று வயது குழந்தையை தாக்கிய சிங்கவால் குரங்கு பிடிபட்டது. வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமியை சிங்கவால் குரங்கு ஒன்று தாக்கி கடித்த நிலையில் சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

குரங்கை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்த நிலையில் கூண்டில் இருந்த பழங்களை சாப்பிட வந்த பொழுது சிங்கவால் குரங்கு வசமாக சிக்கியது. சிங்கவால் குரங்கை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு எங்கு விடுவது என வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

 

Right Menu Icon