--- --:--:-- --

பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் பலி ஆசிரியர் மற்றும் ஆசிரியை பணியிடை நீக்கம் !

1e51a704-e2d3-42d4-8dd3-9c5676384785

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கல்கிணற்று வலசை அரசு உயர்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் கார்த்தீஸ்வரன்,13. வகுப்பாசிரியை அபிலஷா பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஆசிரியர் தமிழரசு அறிவுறுத்தல் படி பள்ளி மின் மோட்டார் ஸ்விட்ச் போட கார்த்தீஸ்வரனை அபிலஷா அனுப்பினார்.

 

இந்நிலையில் மின் மோட்டார் ஸ்விட்ச்சை போட முயன்றபோது கார்த்தீஸ்வரன் உடலில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஆசிரியர்களின் அலட்சிய போக்கால் கார்த்தீஸ்வரன் இறந்ததாக, மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதனையடுத்து, ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் , உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் ஆகியோர் ஆசிரியர்களிடம் துரித விசாரணை நடத்தினர். இதனடிப்படையில், ஆசிரியர் தமிழரசு, ஆசிரியை அபிலஷா ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் அய்யணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon