பட்டாசு ஆலை வெடி விபத்து.. தொழிலாளி இருவர் படுகாயம்..!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது மூலப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். பின்னர் விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





