பேண்ட் பாக்கெட்டில் வெடித்து சிதறிய செல்போன்..!
பெங்களூரில் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து இளைஞர் தீக்காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த பிரசாத் என்பவர் மூன்று மாதங்களுக்கு முன்பு விலை உயர்ந்த செல்போனை வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது செல்போன் வெடித்துள்ளது. இதில் பிரசாத்திற்கு தொடை பகுதியில் ஆழமான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சூழலில் பிரசாத் மருத்துவ செலவுகள் செல்போன் விற்பனை கடையே ஏற்க வேண்டும் என்றும் இல்லை என்றால் வழக்கு தொடர போவதாகவும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





