ஒரு நொடி யோசிக்காமல் சாலையை கடந்த நபர் மீது மோதிய இருசக்கர வாகனம்..!
கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் அருகே கவனமின்றி சாலையை கடக்க முயன்ற நபர் மீது பைக் மோதும் விபத்து காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாகனம் மோதியதும் தூக்கி வீசப்பட்ட அந்த நபருக்கு முதுகுத்தண்டு, கால், கை எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக மூன்று பேரை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






