பிக்பாஸ் 7 ஓட்டிங் விவரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்..!
விஜய் டிவியின் பிக்பாஸ் 7வது சீசன் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. 86 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த தொடர் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
பின் எத்தனையோ போட்டியாளர்கள் வெளியேற சில போட்டியாளர்கள் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார்கள். கடந்த வாரம் பிக்பாஸ் 7வது சீசனில் இருந்து சரவண விக்ரம் வெளியேறி இருந்தார்.
அவர் வெளியேறிய போது சக போட்டியாளர் மாயா செய்த சில விஷயங்கள் ரசிகர்களுக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தியது, பிக்பாஸும் மாயாவை கண்டித்தார். இந்த வாரம் பிக்பாஸ் எவிக்ஷன் லிஸ்டில் மாயா, நிக்சன், தினேஷ், மணிகண்டன், விஷ்ணு, விஜய் வர்மா, ரவீனா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறார்கள்.
எப்போதும் பிக்பாஸ் ஓட்டிங்கில் Alphabet ஆர்டரில் தான் லிஸ்ட் இருக்கும். ஆனால் இந்த முறை மாயா பெயர் முதலில் இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் எப்போதும் இல்லாத புதிய விஷயமாக ஏன் இப்படி இருக்கிறது, அப்போது விஜய் டிவியே மாயாவிற்கு ஆதரவாக ஏதாவது செய்கிறார்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.





