கோயிலுக்குள்ள புகுந்த அம்மன்.. நகைகளை கொள்ளை அடித்த திருடர்கள்..!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோயில் கருவறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அம்மன் சிலையில் இருந்த வெள்ளி கிரீடம் உட்பட 4 லட்சம் மதிப்பிலான நகைகளை தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் பேட்டை நகரில் உள்ள ஸ்ரீ ரேணுகாய்யம்மா ஆலயத்தில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வரும் நிலையில் புகாரின் அடிப்படையில் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





