--- --:--:-- --

கிறிஸ்துமஸ் கொண்டாட ஆலயத்திற்கு சென்று திரும்பிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி..!

5

நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட ஆலயத்திற்கு சென்ற நிலையில் திருடர்கள் வீட்டில் புகுந்து கைவரிசை காட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் ஒரு குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் விழாவிற்காக ஆலயத்திற்கு சென்று நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளனர். அப்பொழுது கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

மூன்று திருடர்கள் இருப்பதை கண்டு சத்தம் போட்டு உள்ளனர் இதனுடைய மூன்று பேரும் திருடிய பொருட்களை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இரண்டு பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் பல பொருட்களையும் திருடி சென்றனர்.

 

தகவலறிந்து வந்த போலீசார் திருடர்கள் அவசரத்தில் விட்டு சென்ற இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 

Right Menu Icon