இன்று 5 மாவட்ட அரையாண்டு தேர்வுகள் ரத்து..!
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நடைபெற இருக்கும் அரையாண்டு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளது.





