சென்னையில் மீண்டும் தடம் புரண்ட ரயில்..!
சென்னை பேசன் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்ற ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அந்த இடத்தில் தற்பொழுது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. சென்னை பேசின்பிரிட் பணிமனை பகுதியில் விரைவு ரயில் தடம் புரண்டு இருக்கிறது.
ரயில் பணிமனைக்கு சென்றதால் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த அசம்பாவிதமும் இல்லை என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.






