மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் : பள்ளி கல்வித்துறை
புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான நான்கு மாவட்டங்களை சேர்ந்த 20,000 பள்ளி மாணவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் கடும் பாதிப்புகளை சந்தித்தனர். குடியிருப்புகள் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இழந்து பொதுமக்கள் பெரும் இழப்பை சந்தித்தனர்.
அதே சமயம் பள்ளிக்கல்வி மாணவர்களின் புத்தகம் தண்ணீரில் நனைந்து சேதமடைந்தன. இதனை தொடர்ந்து மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





