பாரம்பரிய மருத்துவம் வளர அறிவியல் ஆராய்ச்சிகள் தேவை : ஆளுநர் ரவி
பாரம்பரிய மருத்துவம் வளர அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் தேவை என தமிழ்நாடு ஆளுநர் ரவி வலியுறுத்தியுள்ளார். ஆளுநரின் எண்ணி துணி என்ற தலைப்பில் ஆயுஸ் மற்றும் பாரம்பரிய மருத்துவர்களுடன் ஆளுநர் ரவி கலந்துரையாடினார்.
அப்பொழுது பேசியவர் நவீன மருத்துவம், உடலை எந்திரமாக பார்ப்பதாகவும் அதில் பக்கவிளைவுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். நவீன மருத்துவத்திற்கு இருப்பது போல பாரம்பரிய மருத்துவத்திற்கும் ஆழமான ஆராய்ச்சி தேவைப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
பாரம்பரிய மருத்துவ முறை உலக அளவில் வளர அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





