--- --:--:-- --

மனைவி இறந்ததை மனதால் அறிந்த கணவர் தானாகவே இறந்த சோகம்..!

8

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள வாரியங்காவல் கிராமத்தில் வசிப்பவர் ரங்கநாதன். 80 வயதான இவர் மருந்தாளனராக பணியாற்றி வந்துள்ளார்.

 

இவரது மனைவி சகுந்தலா இவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த தம்பதியின் இரு மகன்களும் திருமணம் ஆகி தனியாக வசிக்கின்றனர். திருச்சியில் வசிக்கு மகள் வீட்டில் தற்பொழுது சகுந்தலா வசிக்கிறார்.

 

இந்நிலையில் ரங்கநாதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் கோவையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். திருச்சியில் மகள் வீட்டிலிருந்து சகுந்தலா திடீரென்று இறந்து போனார்.

 

இதையடுத்து கோவையில் சிகிச்சையில் இருந்த ரங்கநாதனுக்கு மனைவி இறந்த தகவலை மறைத்து உறவினர்கள் காரில் அழைத்து சென்றுள்ளனர். திருச்சி அருகே கார் வந்தபொழுது ரங்கநாதனும் தானாகவே இறந்து போனார். 56 ஆண்டுகளாக இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதி இயற்கையாகவே இறப்பிலும் இணைந்தது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் கண்ணீர் விட வைத்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon