பெண் கைதி தப்பி ஓட்டம்.. இரண்டு வார்டன் சஸ்பெண்ட்..!
புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓடியுள்ளார். மாலை 5 மணி அளவில் சிறை கைதிகளை சோதனை இட்டபோது கைது செய்து தப்பியது தெரிய வந்தது.
காலை 6 மணி அளவில் சிறை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியின் பொழுது தப்பிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட பெண் கைதி தப்பி உள்ளார்.
பெண் கைதியான ஜெயந்தி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைதான நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பயின்றுள்ளது. கைதி தப்பிய விவகாரத்தில் சிறை வார்டன் கலகலக்ஷ்மி, கோகிலா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்





