வங்கதேசத்தில் ஜனவரி 7ஆம் தேதி பொதுத் தேர்தல் பாதுகாப்பு தீவிரம்..!
வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நெருங்கி வர உள்ள நிலையில் பாதுகாப்பு கருதி நாடெங்கும் ராணுவத்தினர் குவிக்கப்பட உள்ளனர். வங்கதேசத்தில் வரும் 7ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதை ஒட்டி முறைகேடுகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்க நாடெங்கும் 35,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை தேர்தல் ஆணையம் அனுப்பவுள்ளது.
இந்த தேர்தலில் பிரதமர் தலைமையிலான 14 கட்சிகளோடு கூட்டணி அமைத்து களம் காண்கிறது. ஆனால் தேர்தலில் ஏராளமான முறைகேடுகளுக்கு திட்டமிடப்பட்டிருப்பதாக கூறி போட்டியிடப்போவதில்லை என்று முக்கிய எதிர் கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி கூறியுள்ளது.
இந்த தேர்தல் நேர்மையான முறையில் நடக்க வாய்ப்பே இல்லை என்று அந்த கட்சி கூறியுள்ளது. வங்கதேச, தேசிய வார கட்சி தவிர மேலும் 16 எதிர் கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலையும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தனர். 2018 ல் நடந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





