நீர் திறக்க கோரி டிசம்பர் 15 ஆர்ப்பாட்டம் : இபிஎஸ்
முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி டிசம்பர் 15ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கும் வரை தற்பொழுது முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்தும் வேலூரில் ஒரு போகம் விவசாயம் செய்ய தண்ணீர் திறந்து விடவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயிகளின் அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காதது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடாத தமிழக அரசை கண்டித்து டிசம்பர் 15ஆம் தேதி மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





