ஏமாற்றிய காதலன்.. காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் தாலியோடு போராட்டம்..!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் காதலன் வீட்டு முன்பாக இளம் பெண் தாலியோடு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. குன்னூர் கிராமத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் திவ்யஸ்ரீ என்பவரை காதலித்த நிலையில் இருவரும் தனது பெற்றோருக்கு தெரியாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
பின்னர் இருவரும் தனது பெற்றோரை சம்மதிக்க வைப்பதால் கோவிலில் முறைப்படி திருமணம் செய்ய முடிவானது. ஆனால் திருமணத்திற்கு முதலில் சுரேஷை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் திவ்யஸ்ரீ புகார் அளித்தார்.
ஆனால் காதலன் திரும்பி வராததால் பொறுமை எழுந்தது. குன்னூர் கிராமத்திற்கு சென்று காதலன் வீட்டின் முன்பு கையில் தாலியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். காதலனை கண்டுபிடித்து ஒப்படைப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்து திவ்யஸ்ரீ யை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





