--- --:--:-- --

கருக்கலைப்பு செய்பவர்கள் தொடர்பாக தகவல் தெரிவித்தால் ரூ.50,000 சன்மானம்..!

9

சிசுவின் பாலினத்தை கண்டுபிடிப்பது கருக்கலைப்பு தொடர்பாக தகவல் தெரிவித்தால் 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று மைசூர் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

 

கர்நாடக மாநில மைசூரில் உள்ள மருத்துவமனையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக கைதாகியுள்ளனர்.

 

இந்த நிலையில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டுபிடிப்பது, கருக்கலைப்பு செய்வது குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 50,000 சன்மானம் வழங்கப்படும் என்று மைசூர் சுகாதாரத்துறை அதிகாரி குமாரசாமி தெரிவித்துள்ளார். கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டுபிடிப்பது, கலைப்பது இரண்டுமே தண்டனைக்குரிய குற்றம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon