கணவரை போலீசில் சிக்க வைத்த மனைவி.. அதிர்ச்சி செயல்..!
கணவரை போலீசில் சிக்க வைக்க அவரது மொபைலில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் குறும் தகவல் அனுப்பிய மனைவியை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் குறுந்தகவல் வாயிலாக வந்தது. தனியார் நிறுவனத்தில் வெடிகுண்டு வெடிக்கும் அதில் எனது குறிப்பிட்டு இருந்தது. போலீசாரின் சோதனையில் மிரட்டல் தகவல் போலி என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் மிரட்டல் வந்த மொபைல் கணவருடையது என தெரிய வந்தது இவருக்கும்.அவருக்கும், அவரது மனைவிக்கும் பிரச்சினை இருந்த நிலையில் அவரது மொபைலில் இருந்து குறுந்தகவல் அனுப்பியதும் அம்பலமாகியது. இதனையடுத்து வித்யா ராணியை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.






